நம் கனிகளினால் ஆண்டவரைப் பெருமைப்படுத்த நாம் விரும்பினால் நம்மில் சில தன்மைகள் இருக்கவேண்டும். ஏனெனில் நம்மில் இல்லாதது ஒன்றும் வெளிப்படையாகக் காணப்பட முடியாது. அது நம்பிக்கையில் தொடங்கவேண்டும். அதுதான் எல்லா சிறப்பியல்புகளுக்கும் அடிப்படை. பின்ஊக்கமாக உழைத்து அதோடு ஒழுக்கம், அறிவு, தன்னடக்கம், பொறுமை இவற்றைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். இவற்றோடு கடவுள் பற்றும் சகோதர அன்பும் நிலைத்திருக்கவேண்டும். இவையெல்லாம் நம்மில் ஒருங்கே இணைந்திருந்தால் நிச்சயமாக நம் வாழ்க்கையின் கனிகளாகக்கொத்து கொத்தாக பயனுடைமை என்னும் கனிகளை நாம் கொடுப்பவர்களாயிருப்போம். நாமும் கடவுளின் வார்த்தையைக் கேட்கிறவர்களாய் மட்டுமல்லாமல், அதன்படி செய்கிறவர்களாயும் இருப்போம். இவை நம்மில் ஒரளவு இருப்பதுமட்டும் போதாது, ஆனால் மிகுந்திருக்கவேண்டும்.இல்லையெனில் நாம் கனிகொடுக்கமுடியாது. வாழ்க்கை நிரம்பி வழிவதே கனியாகும். நிரம்பி வழிவதற்கு முன் நாம் நிரப்பப்பட்டிருக்கவேண்டும்.
குறிப்பிடத்தக்க கடமைகளும் வாய்ப்புகளும் பெற்றிருந்தும் சிலர் ஆத்துமாக்களை ஆதாயம்பண்ணுவதில் சிறப்பானமுன்னேற்றம் காட்டாமல் இருந்ததை நாம் அறிந்திருக்கிறோம். அவர்களைக் கூர்ந்து கவனித்தபின் கனி கொடுப்தற்கு அத்தியாவசியமான சில நற்பண்புகள் அவர்களில் இல்லாமல் இருந்ததே காரணம் என்று கண்டுபிடித்திருக்கிறோம். நாம் பயப்படுகிறவர்களாயிருக்க வரங்களை விடநற்பண்புகளே தேவை. ஒருவன் எப்படிப்பட்டவனாயிருக்கிறானோ அப்படிப்பட்டதாகவே அவன் வேலையும் இருக்கும். நாம் நன்றாக வேலைசெய்ய வேண்டுமானால் நல்லவர்களாய் இருக்கவேண்டும். கனிகொடாமல் இருக்கும் போதகர்களும் இதை வாசிப்பவராகிய உமக்கும்கூட இது சிறுஎச்சரிக்கையாயிருக்கட்டும்.
சார்லஸ் ஸ்பர்ஜன்