அகாயா (Achaia)
(அகாயுக்கு என்பவனுடைய தேசம்)
இது ரோமருடைய ஆளுகைக்குக் கீழிருந்த கிரேக்க தேசத்தின் ஒரு பகுதி. கிரேக்க தேசம் என்பது அகாயாவையும், மக்கெதோனியாவையும் அடக்கியுள்ளது (அப். 19:21; ரோமர் 15:26;1 தெச. 1:8).
கல்லியோன் இந்த நாட்டிற்கு அதிபதியாயிருந்த காலத்தில், யூதர்கள் பவுலுக்கு விரோதமாய்க் குற்றஞ்சாட்டினபோது, அவன் அவர்களைத் துரத்தி விட்டான் (அப். 18:12-16)
பவுல் மக்கெதோனியா அகாயா நாடுகளில் சுற்றித் திரிந்து, உபதேசம்பண்ணினான் (அப். 19:21)
இத்தேசத்தார். எருசலேமிலிருந்த தரித்திர விசுவாசிகளுக்குச்
சகாயம் செய்தார்கள் (ரோமர் 15:26).
அகாயாவிலிருந்த சபைக்கும், எப்பனெத்து என்பவனுக்கும், பவுல் வாழ்த்துதல் சொல்லுகிறான் (ரோமர் 16:5).