அத்ரமலேக்கு (Adrammelech)
(இராஜாவின் மேன்மை)
1. ஒரு தேவியின் பெயர். அசீரிய இராஜா செப்பர்வியரையும், செப்பாவாமியரையும் கொண்டுவந்து, சமாரியாவில் குடியேற்றினான். அவர்கள் தங்கள் தேவர்களாகிய, அத்ரமலேக்கையும், அன்னம லேக்கையும் கொண்டுவந்து, அவைகளைச் சேவித்து, பிள்ளைகளையும் தகனபலி கொடுத்தார்கள் (2 இரா. 17:31). யூதரும் இவைகளை வணங்கின தாகத் தெரிகிறது.
2. சனகெரிப் என்பவனின் இரண்டு குமாரர் அவனை நினிவேயிலிருந்த ஒரு கோயிலில் வெட்டிக் கொன்றார்கள். அவர்களில் ஒருவனுடைய பேர் அத்ரமலேக்கு (2 இரா. 19:37; ஏசாயா. 37:38).