அமாசா (Amasa )
(பாரம்)
1. அபிகாயில், இஸ்ரவேலனாகிய எத்திராவுக்குப் பெற்ற மகன். அப்சலோம் இவனை யோவாபுக்குப் பதிலாக இராணுவத்தலைவ னாக்கினான் (2 சாமு. 17:25). அமாசாவின் தகப்பன் இஸ்மவேல் னாகிய யெத்தேர் என்றும் குறித்துள்ளது (1 நாளா. 2:17).
தாவீதின் மனுஷருக்கும், அப்சலோமின் மனுஷருக்கு மிடையில் நடந்த யுத்தத்தில் யோவாப் அமாசாவைத் தோற்கடித்தான் (2 சாமு.18:6-8).
பின்பு அமாசா தாவீதோடு ஒப்புரவாகிக்கொண்டான் (2 சாமு. 19:13).
பிக்கிரியின் மகனாகிய சேபா கலகம் பண்ணினபோது, தாவீது யூதா மனுஷரை சேர்த்துக்கொண்டு வரும்படி அமாசாவை அனுப்பின வேளையில், யோவாப் அவனைச் சந்தித்து தந்திரமாய்க் கொன்றான் (2 சாமு. 20:10).
2.இவன் எப்பிராயிம் புத்திரரின் தலைவரில் ஒருவன். அத்லாயின் குமாரன். ஆகாஸ் அரசாண்ட நாள்களில் இஸ்ரவேல் இராஜாவாகிய பெக்கா, யூதரில் அநேகரை சிறைபிடித்து, சமாரியாவுக்குக் கொண்டுபோன வேளையில், இவனும், வேறு தலைவரும் எழும்பி சிறைப்பட்டவர்களை விடுதலையாக்கினார்கள் (2 நாளா. 28:9-15).