ஆகான் (Achan)
(கலக்கம்)
இவன் யூதா கோத்திரத்து சேராகுவின் சந்ததியான். எரிகோ பட்டணத்தை இஸ்ரவேலர் பிடித்தபோது, சாபத்தீடானதை இவன் களவாய் எடுத்துக்கொண்டான். பின்பு இஸ்ரவேலர் ஆயி பட்டணத்தைப் பிடிக்கப்போனவேளையில், தோல்வியடைந்தார்கள். இதின் காரணத்தை அறியும்படி சீட்டுப் போட்டபோது இவன் அகப்பட்டான். இவனும் அதை ஏற்றுக்கொண்டு, தான் அந்தப் பொருளைக்கண்டு, இச்சித்து, எடுத்துக் கொண்டதாக அறிக்கை செய்தான். அப்பொழுது இவனையும், இவன் குடும்பத்தாரையும், இவனுக்குள்ள எல்லாவற்றையும் எடுத்து ஆகோர் பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோய் அவர்களைக் கல்லெறிந்து கொன்று, எல்லாவற்றையும் சுட்டெரித்தார்கள் (யோசுவா. 7ஆம் அதி).
ஆகோர் என்பதின் அர்த்தம் "கலக்கம்". ஓசியா "ஆகோரின் பள்ளத்தாக்கை, நம்பிக்கையின் வாசலாகக் கொடுப்பேன்" என்று கர்த்தர் சொல்லுகிறார் என்கிறான் (ஓசியா. 2:15). கலக்கப் பள்ளத்தாக்கு நம்பிக்கைக்கு வாசலாகும். இந்தச் சம்பவம் யோசுவா 22:2இல் குறிக்கப்பட்டுள்ளது. இவன் பெயர் ஆசார் என்று 1 நாளா. 2:7இல் குறித்துள்ளது.