« Back to word list

ஆகாய் (Haggai)

(பண்டிகை)

சிறிய தீர்க்கதரிசிகளில் பத்தாம் ஆள். சிறையிருப்புக்குப்பின் முதல் தீர்க்கதரிசனம் சொன்னவன். இவன் பாபிலோனிலேயே பிறந்திருக்கக்கூடும். பின்பு செருபாபேலோடு எருசலேமுக்கு வந்தான். தரியு ராயனின் இரண்டாம் வருடத்தில் (கி.மு. 520) இவனுடைய தீர்க்கதரிசன ஊழியம் நடந்ததாகத் தெரிகிறது. (ஆகா. 1:1, 15; 2:1, 10, 20). எருசலேமில் இரண்டாம் தேவாலயத்தின் கட்டுவேலை, சத்துருக்களுடைய எதிர்ப்பினிமித்தமும், யூதருடைய கவலையீனத்தி னிமித்தமும், தாமதப்பட்டு பதினைந்து வருஷகாலமாய் நிறுத்தப் பட்டது. ஆகாயும் சகரியாவும் ஆலய வேலைக்கு ஜனங்களை ஏவி எழுப்பினதின் பயனாக அதைக் கட்டி முடித்தார்கள்.

« Prev 60 / 564 Next »