ஆதாம் (Adam)
(ஆதி மனிதன் மண்ணிலிருந்து உண்டானவன்)
ஆதாம் என்ற பெயர் சொந்தப் பெயராகவும், பொதுப் பெயராகவும் வேதாகமத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளது.
தேவன் தமது சாயலாக மனுஷனை சிருஷ்டித்தாரென்றும், அவர் மனுஷனைப் பூமியின் மண்ணினால் உருவாக்கி ஜீவ சுவாசத்தை அவன் நாசியில் ஊதினார். மனுஷன் ஜீவாத்துமாவானான் என்றும் குறித்துள்ளது (ஆதி. 1:26; 2:7).
மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டதைப்பற்றி, வெவ்வேறு காரணத்தில் னிமித்தம் ஆதியாக மத்தில் இரண்டு தடவைகளில் விவரித்துள்ளது
1. தேவன் சகல ஜீவராசிகளைச் சிருஷ்டித்தபின் அவைகளை ஆளுவதற்காக மனுஷனை சிருஷ்டித்தார்.
2. மனுஷன் தேவனுடைய ஆவியுள்ளவனானதால், தேவனோடு ஐக்கியப்பட்டிருக்கக்கூடியவனாயிருக்கிறான்.
ஆதாமுக்கு ஏற்ற துணையைக் கொடுப்பதற்காகக் கர்த்தர் அவனுடைய விலா எலும்பை எடுத்து. அதை மனுஷியாக உண்டாக்கினார். அவர்களிருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள் (ஆதி.2:21-25).
பின்பு தேவன் அவர்களை நோக்கி "நீங்கள் பலுகிப்பெருகி சகல ஜீவ ஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்றார் (ஆதி. 1:28).
தேவன் அவர்களை ஏதேன் தோட்டத்தின் நடுவிலிருக்கிற விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாமென்று சொன்னதற்கு மாறாய், ஏவாள் அதைப் புசித்து தன் புருஷனுக்கும் கொடுத்தாள். அப்பொழுது தாங்கள் நிர்வாணிகளென்று அறிந்தார்கள் (ஆதி.3:1-7).
தேவன் அவர்களைச் சந்தித்து அவர்கள்மேல் வரப்போகிற தண்டனையைக் கூறினார். சர்ப்பத்தை நோக்கி, "ஸ்திரீயின் வித்து உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்" என்றார் (ஆதி.3:8-10).
ஆதாம் தன் மனைவிக்கு, ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாய் என்னும் கருத்துள்ள 'ஏவாள்' எனப் பேரிட்டான் (ஆதி. 3:20).
பின்பு கர்த்தர் ஆதாம், ஏவாளை ஏதேன் தோட்டத்திலிருந்து, ஜீவவிருட்சத்தின் கனியைப் புசித்து என்றென்றைக்கும் உயிரோடிராதபடி அனுப்பிவிட்டார் (ஆதி. 3:21-24).
அவர்களுக்குக் காயீன், ஆபேல் என்ற இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள்.காயீன் ஆபேலைக் கொலை செய்தபின் சேத் என்னும் ஒரு குமாரன் பிறந்தான் (ஆதி. 4:25). ஆதாமுக்கு அப்போது நூற்று முப்பது வயதாயிருந்தது. பின்பு எண்ணூறு வருடம் ஜீவித்து தொளாயிரத்து முப்பதாம் வயதில் மரித்தான் (ஆதி. 5:2-5).
இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு ஆதாமிலிருந்து வரையப் பட்டுள்ளது. ஆதாம் தேவனால் உண்டானவன் (லூக்கா. 3:28-38).
ஆதாமைச் சேர்ந்தவர்களென்றும், கிறிஸ்துவைச் சேர்ந்தவர்க ளென்றும் இரு பகுதியாய் பவுல் அப்போஸ்தலன், மனுஷ ஜாதியாரைப் பிரிக்கிறான். அதாவது, ஆதாம் பாவத்துக்கும், மரணத்துக்கும் காரணமாயிருந்ததினால் இவ்விரண்டு சாபமும் அவனுடைய சந்ததியாரான எல்லார் மேலும் வருகிறது. ஆவிக்குரிய பிறப்பினால் கிறிஸ்துவை அண்டினோர்க்கு ஜீவனை அளிக்கும் நீதி உண்டாகிறது. இவ்விதமாய் இரு பகுதியாருண்டு (ரோமர் 5:12-21).
ஆதாமுக்குள்ளே எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுகிறார்கள். அதாவது ஆதாம் செய்த பாவத்தினால் மரணம் வந்ததினாலே, ஆதாமின் சந்ததியா ரெல்லாருக்கும் அது உடையதாயிற்று. அதுப்போல் கிறிஸ்துவினால் வரும் நித்திய ஜீவனும் அவரோடு ஐக்கியப்படும் எல்லாருக்கும் உரியதாகும் (I கொரி. 15:22).
ஆதாம், மண்ணினால் உருவாக்கப்பட்டு, இவ்வுலக சுபாவமுள்ளவனாயிருந்தான். கிறிஸ்துவோ, பரத்திலிருந்துவந்த ஆவிக்குரிய சுபாவமுள்ளவரும், ஜீவனைக் கொடுக்கும் வல்லமை யுள்ளவராயுமிருக்கிறார் (1 கொரி. 15:45).
ஆதாம் முந்தின மனுஷன்; அவனுக்கு முன் ஒருவரும் இருந்ததில்லை. மனுஷ ஜாதியாருக்கு அவன் முற்பிதா. அவனுடைய பாவத்தினிமித்தம், அவனுடைய சந்ததியார் பாவத்துக்கும், மரணத்துக்கும் உட்பட்டிருக்கிறார்கள். பிந்தின ஆதாமாகிய கிறிஸ்துவை விசுவாசிப்போர், நீதிமான்களாக்கப்பட்டு நித்திய ஜீவனையும் அடைவார்கள்.
ஆகவே கிறிஸ்து கடைசி ஆதாமாகிறார். இதனால் ஆதாம் பின் வந்த கிறிஸ்துவுக்கு முன்னடையாளமானவன்.
2. ஆதாம் என்ற பெயருள்ள ஒரு ஊர் யோர்தான் கரையில் யாப்போக்கு அருகில் உள்ளது (யோசுவா. 3:16).