ஆபிப் (Abib)
(தானியக் கதிர்)
எபிரெயர் பஸ்காப் பண்டிகை கொண்டாடின, வருடத்தின் முதலாம் மாதம் ஆபிப் (யாத். 13:4). இந்த மாதத்தில் புளிப்பில்லா அப்பப் பண்டிகை கொண்டாடினார்கள் (யாத். 23:15; 34:18). ஆனாலும் ஆபிப் ஒரு மாதத்தின் பெயர் அல்ல. அது கதிர் பயிர்க் காலம் (யாத். 9:31). சிறையிருப்புக்குப் பின் இந்த மாதத்தை நீசான் என்று சொல்லிக் கொண்டார்கள் (நெகே. 2:1; எஸ். 3:7).
எபிரெயரின் மாதங்கள் ஆங்கில மாதங்கள்
1.ஆபிப், நிசான்
(யாத். 12:2; நெகே. 2:1). - மார்ச்-ஏப்ரல்
2. சீப் (1இரா. 6:1,37).- ஏப்ரல்-மே
3.சீவான் (எஸ். 8:9). - மே-ஜூன்
4.தம்மூஸ் (எசே. 8:14). - ஜூன்-ஜூலை
5.ஆபி - ஜூலை-ஆகஸ்டு
6.எலூல் (நெகே 6:15). - ஆகஸ்டு-செப்டம்பர்
7.ஏத்தானீம் (1 இரா.8:2). - செப்டம்பர்-அக்டோபர்
8.பூல் (1இரா.6:38). - அக்டோபர்-நவம்பர்
9.கிஸ்லேயு (நெகே.1:1) - நவம்பர்-டிசம்பர்
10.நேபேத் (எஸ். 2:16). - டிசம்பர்-ஜனவரி
11.சேபாத் (சக. 1:7). - ஜனவரி-பிப்ரவரி
12.ஆதார் (எஸ்றா. 6:15) - பிப்ரவரி-மார்ச்