இல்க்கியா (Hilkiah)
(கர்த்தர் என் காவல்)
1. இவன் யோசியா இராஜாவின் நாள்களிலிருந்த பிரதான ஆசாரியன். கர்த்தருடைய ஆலயத்தைப் பழுது பார்த்த சமயத்தில், நியாயப்பிரமாண புத்தகத்தை இவன் சம்பிரதியாகிய சாப்பானிடம் கொடுத்தான். கண்டெடுத்துச்
இராஜா அந்தப் புத்தகத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, கர்த்தருடைய சித்தத்தை அறியும்படி இல்க்கியாவையும், வேறு ஆள்களையும் உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்தில் அனுப்பினான்.
பின்பு இராஜாவின் சொற்படி பாகால் விக்கிரகங்களை தேவா லயத்திலிருந்து புறம்பாக்கவும், வேறு சீர்த்திருத்தங்கள் செய்யவும், இவன் உதவியாயிருந்தான் (2 இரா. 22:8-14); 2 நாளா. 34;14-28).
2.எஸ்றா நியாயப் பிரமாண புத்தகத்தை வாசித்தபோது அதின் அர்த்தஞ் சொல்ல அவனோடு நின்றவர்களில் ஒருவன் (நெகே. 8:4).
3. செருபாபேலோடு யூதேயாவுக்குப் போன ஆசாரியர்களில் ஒருவன் (நெகே. 12:7).
4. மெராரிய லேவியனான அம்சியின் புத்திரன் (1 நாளா. 6:45). மெராரிதின் புத்திரரில் ஓசா என்பவனின் மகன் (1 நாளா. 26:11).
5. எரேமியா தீர்க்கதரிசியின் பிதா (எரே. 1:1).