எலிமலேக்கு (Elimelech)
(என் தேவன் இராஜா)
யூதா கோத்திரத்தான். ஒரு செல்வாக்கான மனுஷன். பெத்லகேம் ஊரான். நகோமியின் புருஷன் (ரூத். 1:2,3). நியாயாதிபதிகளின் நாட்களில் கொடூர பஞ்சம் உண்டானதினால், இவன் தன் மனைவியாகிய நகோமியையும், மக்லோன், கிலியோன் என்னும் இரண்டு குமாரரையும் கூட்டிக்கொண்டு, மோவாப் தேசத்துக்குப் போய் அங்கே இருந்தான். பின்பு எலிமலேக்கு இறந்து போனான். இரண்டு குமாரரும் ஒர்பாள், ரூத் என்னும் மோவாபிய பெண்களை விவாகம் பண்ணினார்கள். பத்து வருடமாகும் முன் இரண்டு குமாரரும் மரித்தார்கள் (ரூத். அதி. 1).