« Back to word list

ஏதேன் (Eden)

(மகிழ்ச்சி)

1. எசேக்கியாவின் சீர்த்திருத்தங்களில் உதவியாயிருந்த ஒரு லேவியனின் பெயர் (2 நாளா. 29:12; 31:18).

2. தீருவுடன் வியாபாரம் செய்த இடமும், ஜனங்களும் (எசே.27:23; 2 இரா. 19:12; ஏசாயா. 37:12).

ஏதேன் தோட்டம் (Garden of Eden)

ஆதாம், ஏவாள் என்பவர்களுக்காகத் தேவன் உண்டாக்கின தோட்டம் (ஆதி. 2:8).

கர்த்தர் சீயோனிலிருக்கிற வனாந்தரத்தை (யூதா தேசம்) ஏதேனைப் போலாக்குவார் (ஏசாயா. 51:3).

தீருவின் அதிபதி, தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன். இங்கே தீருவின் அதிபதி என்பது தீரு இராஜ்யத்தில் ஆளுகை செய்து கொண்டிருந்த விழுந்துபோன ஆவியைக் குறிக்கும். அதாவது அந்தத் தூதன் (எசே. 28:13). அவன் ஏதேனில் பாவமில்லாத பரிபூரணனாயிருந்தான்.

இந்தத் தோட்டம் இருந்த இடத்தைத் திட்டமாய் சொல்லக்கூடாத போதிலும் திகிரிஸ், ஐப்பிராத்து என்னும் நதிகள் இத்தோட்டத்திற் கூடாய்ப் போன ஓர் ஆற்றின் கிளைகள் என்று சொல்லப்படுகிறது.

ஆதாமும், ஏவாளும் இந்தத் தோட்டத்திலிருந்தபோது, பிசாசினால்

சோதிக்கப்பட்டு, நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப்புசித்ததினிமித்தம் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டார்கள் (ஆதி.3:4-6, 23). ஏதேன் தோட்டத்தைக் காவல் செய்ய கேருபீன்களையும், சுடரொளிப் பட்டயத்தையும் தேவன் வைத்தார்.

« Prev 157 / 564 Next »