ஏரோதியாள் (Herodias)
மகா ஏரோதுவின் பேத்தி. முதலாம் ஏரோது அகிரிப்பாவின் சகோதரி. ஏரோதியாள் முதலில் பிலிப்பு என்பவனுக்கு மனைவி யாயிருந்து, பின்பு அவனைவிட்டு காற்பங்கு தேசாதிபதியாயிருந்த ஏரோதைச் சேர்த்துக்கொண்டாள். இதினிமித்தம் யோவான் ஸ்நானன் அவனைக் கடிந்து கொண்டபோது, அவனைக் காவலில் போட்டான் (மத். 14:1-12). ஏரோதியாள் யோவானைக் கொன்றுபோட வகை தேடியும் ஏரோது அவனைப் பாதுகாத்தான் (மாற்கு. 6:19,20). பின்பு ஏரோதின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், ஏரோதியாளின் ஏவுதலின்படி யோவான் ஸ்நானன் சிரச்சேதம் பண்ணப்பட்டான் (மாற்கு. 6:28).