« Back to word list

ஒரேப் (Horeb)

(பாழான)

1. ஓரேபும் சீனாயும் ஒன்றே. சீனாய் ஒரு மலை என்றும், வனாந்தரம் என்றும், பழைய ஏற்பாட்டில் 35 தடவையும், அதே மலை ஓரேப் என்று 17 தடவையும் குறிக்கப்பட்டுள்ளது. உபாகமத்தில் அநேக இடங்களில் ஒரேப் என்றே சொல்லியுள்ளது.

இந்த இரண்டு பெயர்களையுமுடைய மலை தேவபர்வத மென்றும் அழைக்கப்படுகிறது.

மோசே பார்வோன் வீட்டை விட்டபின் சீனாய் குடா நாட்டுக்குக் கிழக்கேயுள்ள மீதியான் தேசத்துக்குப் போய்ச் சேர்ந்தான். அங்கே எத்திரோவின் ஆடுகளை மேய்த்துக் கொண்டு, வனாந்தரத்துக்கு மேற்குப் பக்கமாயுள்ள தேவ பர்வதம் என்னும் ஓரேப் மலைக்கு வந்தபோது அவனுக்குத் தேவதரிசனம் கிடைத்தது (யாத். 3:1).

மோசேயைத் தவிர எபிரெயரில் எலியா மாத்திரம் இந்த மலைக்குப் போனான் (1 இரா. 19:8).

2.ஒரேப் மீதியானியரின் அதிபதி எப்பிராயீமர் இவனை ஒரேப் என்னும் மலையில் கொன்றுபோட்டு, அவன் தலையைக் கிதியோனிடம் கொண்டு போனார்கள் (நியா. 7:25). ஏசாயாவும் இதைப்பற்றி ஏசாயா 10:26இல் குறித்திருக்கிறார். தேவனுடைய சத்துருக்களை ஒரேபுக்கும், சேபுக்கும் சமமாக்கும் என்றும் சொல்லியுள்ளது (சங். 83:11).

« Prev 183 / 564 Next »