« Back to word list

ஒலிவமரம் (Olive)

நோவா பேழையிலிருந்து வெளியே விட்ட புறா, ஒலிவ மரத்தின் இலையைக் கொத்திக்கொண்டு வந்ததென்று சொல்லியுள்ளது (ஆதி. 8:11). இந்த மரம் பலஸ்தீனாவில் அதிகமாகக் காணப்பட்டது. இது இராஜ விருட்சம் (நியா. 9:8), நேர்த்தியும் பச்சையுமான மரம் (எரே. 11:16). அலங்காரமானது (ஓசியா. 14:6), பழம் உள்ளது (யாக். 3:12), எனப் பலவிதமாய் விவரித்துள்ளது. ஒலிவ மரம் வளருகிறபோது, அதில் நல்ல ஜாதி மரக்கொப்பை ஒட்ட வைத்தால், நல்ல பழம் கொடுக்கும். காட்டொலிவ மரம், நல்ல ஒலிவ மரம் என்பவைகளைப் பற்றி ரோமர் 11:24இல் சொல்லியுள்ளது.

சாலொமோன் கட்டின தேவாலயத்தின் கதவுகளும், கேருபீன் முதலியவைகளும் ஒலிவ மரத்தால் செய்யப்பட்டன (1 இரா. 6:23; 31-33). அக்காலத்தில் ஒலிவ எண்ணெய் எரிக்கிறதற்கும், காயங்கள் சுகமாக்குவதற்கும் உபயோகிக்கப்பட்டன (லூக்கா. 10:34).

« Prev 185 / 564 Next »