« Back to word list

கப்பர்நகூம்

(Capernaum)

(நாகூமின் ஊர்)

இது கலிலேயாக் கடலுக்கு வடமேற்கில் இருந்த ஒரு பட்டணம். இயேசு நாசரேத்தை விட்டுப்போக நேர்ந்தபோது, கப்பர்நகூமிலே வாசம்பண்ணினார் (மத். 4:13). அக்காலத்தில் இது கடற்கரை யோரத்தில் இருந்த ஓர் விசேஷப்பட்டணம். அங்கே ஓர் ஆயத்துறையும் இராஜாவின் மனுஷனுடைய வீடும் இருந்தன (மத். 9:9; யோவான் 4:46). அங்கே இருந்த ரோமப் பட்டாளத்தின் நூற்றுக் கதிபதி யூதருக்காக ஒரு ஜெப ஆலயத்தைக் கட்டினான் (மத். 8:5; லூக்கா. 7:1).

இயேசுவின் ஊழியம் இவ்விடத்தில் அதிகமாய்ச் செய்யப் பட்டது.

ஜெப ஆலயத்தில் அசுத்த ஆவியுள்ள சுகமாக்கினார் (மாற்கு. 1:23-26). சீமோனுடைய மாமியின் ஜூரத்தை மனுஷனைச் நீக்கினார் (மாற்கு. 1:31). படுக்கையிலிருந்த திமிர்வாதக்காரனுடைய பாவத்தை மன்னித்து, அவனை எழுந்து நடக்கச் செய்தார் (மத். 9:2-7; லூக்கா. 5:18-25). ஆயத்துறையில் இருந்த மத்தேயுவை அழைக் கவே, அவன் அவருக்குப் பின் சென்றான் (மத். 9:9). நூற்றுக் கதிபதியின் வேலைக்காரனைச் சுகப்படுத்தினார் (மத். 8:5). ஜெப ஆலயத் தலைவனாகிய யவீருவின் குமாரத்தியைச் சொஸ்த மாக்கினார் (மாற்கு. 5:22). இராஜாவின் மனுஷனுடைய குமாரன் ஒருவனைப் பிழைக்கச் செய்தார் (யோவான் 4:46). வரிப்பணம் கொடுக்க மீனின் வாயிலிருந்து வெள்ளிப்பணம் கிடைக்கச் செய்தார் (மத்.17:27). ஜீவ அப்பத்தைப்பற்றி, அங்கிருந்த ஜெப ஆலயத்தில் பிரசங்கித்தார் (யோவான் 6:59).

கப்பர்நகூம் இயேசுவின் பட்டணம் என்று குறித்துள்ளது (மத். 9:1). அங்கே அவர் போயிருந்தபோது வீட்டிலே சீஷருக்குத் தாழ்மையைப்பற்றி உபதேசம் பண்ணினார் (மாற்கு. 9:33-37).

கடைசியாய் இயேசு இப்பட்டணத்தைக் குறித்து, “உங்களுக்கு ஐயோ" என்றார் (மத். 11:23; லூக்கா. 10:15). அவ்விதமே இந்தப் பட்டணம் சமூலமாய் அழிந்து, அது இருந்த இடமும் தெரியாமல் போய்விட்டது.

« Prev 194 / 564 Next »