கர்மேல் (Carmel)
(தேவனுடைய திராட்சைத் தோட்டம்)
1. இது பலஸ்தீனாவில் கலிலேயாக்கடல் அருகிலிருந்து மத்திய தரைக்கடல் மட்டும் போகிற 13 மைல் நீளமுள்ள ஒரு மலைத் தொடர். இங்கே 500 அடி உயரமுள்ள ஒரு சிகரத்தில் "பரி. ஏலியஸ்” என்னும் ஒரு கன்னியாஸ்திரி மடம் இருக்கிறது.
யோசுவா முறிய அடித்தவர்களில் கர்மேலுக்கடுத்த
யொக்னியாமின் இராஜாவும் ஒருவன் (யோசுவா. 12:22).
ஆசேர் கோத்திரத்துக்கு இது கொடுக்கப்பட்டது (யோசுவா 19:26).
எலியாவும், பாகாலின் தீர்க்கதரிசிகளும் விவாதம் செய்த இடம்(1 இரா.18:19).
எலிசாவும் அங்கே போக்குவரத்தாயிருந்தான் (2 இரா. 2:25).
சூனேமியாளும் அங்கே போனாள் (2 இரா. 4:25). "கர்மேல்" என்னும் சொல் உவமைப்பேச்சாய் உபயோகிக்கப்பட்டது. அது அழகு, (உன். 7:5) செழிப்பு, (ஏசாயா 35:2) உறுதியான நிலை, (எரே. 46:18) செல்வாக்கான ஜீவியம் (எரே. 50:19) என்பவைகளைக் குறிக்கும்.
மேலும் "கர்மேல்" சோர்ந்து போகுதலுக்கும், கர்த்தரின் பழி வாங்குதலுக்கும் (நாகூம் 1:4) அழிவுக்கும், (ஆமோஸ் 1:2; ஏசாயா.33:9) ஒப்பிடப்பட்டுள்ளது.
2. எபிரோனுக்குத் தெற்கேயுள்ள யூதாவின் பட்டணம். கர்மேலில் நாபாலுக்கு ஆட்டு மந்தைகளும் இருந்தன (1 சாமு. 25:2).
சவுல் இராஜா அமலேக்கியரை மடங்கடித்தபின் அங்கே ஒரு ஜெயஸ்தம்பம் நாட்டினான் (1 சாமு. 15:12).
கர்மேலியனாகிய எஸ்ராயின் வீடு அங்கே இருந்தது (2 சாமு. 23:25).