கல்தேயன் (Chaldean)
கல்தேய தேசத்தான். கல்தேயர் தொடக்கத்தில் அராபியாவி லிருந்து வந்து குடியேறினார்கள். கி.மு. 8-ஆம் நூற்றாண்டில் முன்னேறி வந்து பாபிலோனியாவைக் கீழ்ப்படுத்தினார்கள். மெரோடாக்பலாதன் (Merodach Baladan) ஒரு கல்தேயன் (ஏசாயா. 39:1). ஆனால் கல்தேய இராஜாக்களில் பேர் பெற்றவன் நெபுகாத் நேச்சார். கல்தேயரின் ஊர் என்ற பட்டணமே அவர்களுடைய முக்கியப் பட்டணம் (ஆதி. 11:28; 15:2; நெகே. 9:7).
கல்தேயனென்று ஜோசியனுக்கும், மாயவித்தைக்காரனுக்கும் சொல்லியுள்ளது (தானி. 2:2; 4:7).