« Back to word list

கல்தேயா (Chaldea)

ஆரம்பத்தில் பாபிலோனியாவின் தென்கிழக்குப் பக்கம் கல்தேயா எனப்பட்டு, பின்பு முழு பாபிலோனியாவுக்கும் இப்பெயர் வழங்கலாயிற்று. மெசொபொத்தோமியாவின் ஒரு பகுதியாகிய

பாபிலோனியா, 400 மைல் நீளம், 100 மைல் அகலமான தேசம். அராபியா தேசத்திலிருந்து கல்து என்னும் ஒரு ஜாதியார் வந்து குடியேறியதினிமித்தம், இப்பெயர் கொடுக்கப்பட்டது.

பின்பு கல்தேயனாகிய நெபோபிலாசர் (Neboplasser) கி.மு. 626இல் பாபிலோனின் இராஜாவாகி, தன் இராஜ்ய வம்சத்தை நிலை நிறுத்தும்படி, கல்தேய குலத்தை மேலாக்கினான். அவனுக்குப் பின் நேபுகாத்நேச்சார், எவில்மேரொதாக், நேபோநிதஸ், பெல்ஷாத்சார் என்பவர்கள் அரசாண்டார்கள்.

தானியேலின் நாள்களில் பாபிலோனியர் கல்தேயரெனப்பட்டார்கள் (தானி. 5:7).

மேதியனாகிய தரியு இராஜா ஒரு கல்தேயன் (தானி. 9:1).

ஊர் என்ற முக்கியப் பட்டணம் கல்தேயாவில் உள்ளது.

« Prev 200 / 564 Next »