« Back to word list

காதோஸ் பர்னேயா (Kadesh-Barnea)

(பர்னேயாவின் பரிசுத்த இடம்)

இது பலஸ்தீனாவுக்குத் தெற்கு பக்கமாயுள்ள ஒரு வனாந்தரம். இஸ்ரவேலர் பிரயாணம்பண்ணின காலத்தில் இது அவர்களுக்கு 38 வருடங்களாகப் பிரதான தங்கும் ஸ்தலமாயிருந்தது. கானானைச் சுற்றிப் பார்க்க ஆள்களை, அனுப்பின நாள் துவக்கி, அவர்கள் காதேசுக்குப் போகும் மட்டும், இவ்விடத்தில் தங்கியிருந்தார்கள். இது சீன் வனாந்தரத்துக்கருகேயும், ஏதோமின் எல்லைக்கருகேயும்,

சீனாயிலிருந்து பதினொரு நாள் பயணத் தூரத்திலிருந்தது (எண். 20:1,14,16; 34:4; உபா. 1:1).

கெதர்லாகோமேர் என்பவன் காதேஸ் என்னும் என்மிஸ்பாத் வரைக்குமுள்ள தேசங்களைக் கட்டிக்கொண்டான் (ஆதி. 14:7).

ஆகார் ஓடிப்போன வேளையில், கண்ட கிணறு காதேசுக்கருகில் இருந்தது (ஆதி. 16:14).

ஆபிரகாமும் பிரயாணம் பண்ணிக் காதேசுக்கு அருகில் குடியேறினார்கள் (ஆதி. 20:1).

கானான் தேசத்தைச் சுற்றிப் பார்க்கப் போனவர்கள் திரும்பி காதேசுக்கு வந்தனர் (எண். 13:26).

கோராகுவின் கலகம் நடந்ததும், இஸ்ரவேலர் காதேசிலிருந்த நாள்களிலேயே (எண். அதி. 16).

இஸ்ரவேலர் காதேசிலே தங்கியிருக்கையில் மிரியாம் மரித்து அடக்கம் பண்ணப்பட்டாள் (எண். 20:1).

தண்ணீர் இல்லாதிருந்தபோது, இஸ்ரவேலர் முறுமுறுத்ததினால், மோசே கன்மலையை அடித்து தண்ணீர் வரச் செய்தது இவ் விடத்திலேயே (எண். 20:2-12).

மோசே காதேசிலிருந்து ஏதோம் இராஜாவிடம், அவனுடைய தேசம் வழியாய்ப் போக உத்தரவு கேட்டபோது உத்தரவு கிடைக்கவில்லை (எண். 20:14-21).

எசேக்கியேலும் காதேசிலுள்ள கலகத்தின் தண்ணீர்களைப் பற்றிப் பேசுகிறான் (எசே. 47:19).

« Prev 202 / 564 Next »