« Back to word list

கோராகு (Korah)

(மொட்டை)

1. கோகாத்தின் சந்ததியானான இத்சேயான் குமாரன் கோராகு (யாத். 6:21). இவன் ரூபன் வம்சத்து தாத்தானையும், அபிராமையும், பேலேத்தின் குமாரனாகிய ஓனையும், இன்னும் சபைத் தலைவராகிய 250 பேரையும் கூட்டிக்கொண்டு ஆரோன், மோசே என்பவர்களுக்கு விரோதமாக எழும்பினான் (எண். 16:1-3).

தேவனுடைய சொற்படி, மோசே அவர்களிடம் போய், மற்ற ஜனங்களை விலகிப் போகும்படி செய்து தேவதீர்ப்பைக் கூறவே, பூமி தன் வாயைத் திறந்து அவர்களையும், பொருள்களையும் விழுங்கிற்று (எண். 16:25-32).

கோராகின் குமாரரோ சாகவில்லை (எண். 26:11). இவன் பெயர் “கோரா” என்று யூதா 11இல் குறித்துள்ளது.

2. ஏதோமியரின் தகப்பனாகிய ஏசாவின் குமாரன் (ஆதி. 36:5).

3. கோராகு ஏசாவின் பேரனென்றும் சொல்லியுள்ளது (ஆதி.36:16).

4. கோகாத்தின் சந்ததியான் (1 நாளா. 6:22). கோராகின் குமாரர் தாவீதின் நாள்கள் துவங்கி சங்கீத சேவை செய்தார்கள் (1 நாளா. 6:37).

« Prev 250 / 564 Next »