கோலியாத் (Goliath)
(சிறைவாசம்)
1. காத் ஊரிலிருந்த ஒரு பெலிஸ்திய இராட்சதன். அவன் ஒன்பது அடிக்கு மேலான உயரமுள்ளவன். பெலிஸ்தருக்கும் இஸ்ரவேலருக்கு மிடையில் யுத்தம் நடந்த நாள்களில், இவன் தன்னோடு போர் செய்ய இஸ்ரவேலரில் யாராவது ஒருவரை அழைத்த வேளையில், அவர்கள் பயந்து ஒருவனும் போகவில்லை. தாவீது அங்கே போயிருந்த வேளையில் அவனைக் கொன்ற சம்பவம் 1 சாமு. 17இல் விவரித்துள்ளது.
2. 2 சாமு. 21:19; 1 நாளா. 20:5லும் ஒரு கோலியாத்தைப் பற்றிச் சொல்லியுள்ளது. அவன் யார் என்பதை நிச்சயித்தற்கரியது.