சகேயு (Zacchaeus)
(தூய்மை)
சகேயு எரிகோவிலிருந்த ஆயக்காரருக்குத் தலைவனும், ஐசுவரியவானுமாயிருந்தான். இயேசு வருகிறார் என்று கேள்விப்பட்டு அவன் குள்ளனானபடியால், அவரைப் பார்க்க ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். இயேசு அவனைக் கண்டு, அவனுடைய வீட்டில் தங்க விரும்பியபோது, சகேயு அவரைச் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டான். அப்பொழுது அவன் தன் பாவத்தை அறிக்கையிட்டு, இனிமேல் அநியாயமாய் எதையும் வாங்கமாட்டேன் என்று சொன்னான்.
இதைக்கேட்டு இயேசு, இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்ததென்றும், மனுஷகுமாரன் இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே வந்தார் என்றும் சொன்னார் (லூக்கா. 19:1-10).
இந்தச் சம்பவத்தை சுவிசேஷகரில் லூக்கா மாத்திரமே குறித்துள்ளான்.