சனகெரிப் (Sennacherib)
சனகெரிப் அசீரியரின் இராஜா (கி.மு. 681-705). அவனுடைய தகப்பன், சர்கோன் அவன் கொல்லப்பட்டபோது, இவன் இராஜாவானான். அப்பொழுது அவனுடைய இராஜ்யத்தில் கலகங்கள் உண்டாயின.
பலாதானின் குமாரனாகிய பெரோதாக் பலாதான் என்னும் பாபிலோனின் இராஜா பாபிலோனைக் கைப்பற்றிக் கொண்டு மற்ற தேசங்களோடும் சமாதானமாகி யூதா இராஜாவாகிய, எசேக்கியா வுக்கும் நிருபங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான் (2 இரா. 20:12).
கி.மு. 702இல் மெரோதாக் பலாதான் தோற்கடிக்கப்பட்டான். ஆனால் ஒரு வருடத்துக்குப் பின் அசீரிய இராஜா யூதாவைத் தோற்கடித்து, எசேக்கியாவைத் திறை கொடுக்கப் பண்ணினான் (2 இரா.18:13-16).
அடுத்த வருடம் அசீரிய இராஜா சனகெரிப் பாபிலோனை இரண்டாம் முறை முற்றுகை போட்டிருக்கையில் எசேக்கியா கலகம் பண்ணினதினிமித்தம், சேனைகளை அவனுக்கு விரோதமாய் அனுப்பினான். எசேக்கியா கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். அப்பொழுது ஏசாயா சொல்லியனுப்பியபடி, அன்று இராத்திரி கர்த்தருடைய தூதன் அசீரியருடைய சேனைகளை அடித்து 1,85,000 யுத்த வீரரைக் கொன்றதினால், சனகெரிப் திரும்பி போனான் (2இரா. 19:19-35).
சனகெரிப் பிரயாணப்பட்டுப் போய் நினிவேயிலிருந்தான். அங்கே தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோயிலிலே பணிந்து கொள்ளும் போது அவன் குமாரராகிய அத்ரமேலுக்கும், சரேத்சேரும் அவனை வெட்டிப் போட்டு ஓடிப்போனார்கள் (2 இரா, 19:37),
அவன் குமாரனாகிய எசரத்தோன் இராஜாவானான்.