சல்லூம் (Shallum)
1. சல்லூம் என்பதன் பொருள் "பிரதிபலன்". இஸ்ரவேலின் 15- ஆம் இராஜா. (கி.மு. 745) யெகூ இராஜாவின் வம்சத்தானாகிய சகரியா அரசாண்டபொழுது, சல்லூம் அவனைக் கொன்று போட்டு. தான் இராஜாவானான். இவன் சமாரியாவில் ஒரு மாதம் மட்டும் அரசாண்டபின், மெனாகேம் திர்சாவிலிருந்து வந்து, இவனைக் கொன்று போட்டு தான் இராஜாவானான் (2 இரா. 15:10-14).
2. இவன் யூதாவின் இராஜாவாகிய யோசிதாவின் குமாரன் (1 நாளா. 3:15; எரே. 22:11). யோவகாஸ் இவனுடைய மறு பெயர் (2 நாளா. 36:1). மூன்று மாதம் எருசலேமில் அரசாண்டான்.
3. நப்தலியின் குமாரன் (1 நாளா. 7:13). சில்லேம் என்றும் குறித்துள்ளது (ஆதி. 46:24; எண். 26:49).
4. உல்தாள் என்னும் தீர்க்கதரிசினியின் புருஷன் (2 இரா. 22:14; 2 நாளா. 34:22). .
5. சாதாக்கின் குமாரனாகிய ஒரு பிரதான ஆசாரியன் இலக்கியாவின் தகப்பன் (1 நாளா. 6:12,13; எஸ்றா.7:2).
6. எருசலேமின் அலங்கத்தைக் கட்டினவன் (நெகே. 3:12).
7. அந்நிய ஸ்திரீகளை விவாகம் பண்ணினவன் (எஸ்றா. 10:24).