சாலேம் (Salem)
சாலேம் என்பதன் பொருள் “சமாதானம்". எருசலேமின் பூர்வீக பேராயிருக்கலாம். இது மெல்கிசேதேக்கு அரசாண்ட தேசம் ஆதி. 14:18; எபி. 7:1). "இராஜாவின் பள்ளத்தாக்கு" என்னும் சாவே பள்ளத்தாக்கு அருகே இருந்தது. தமஸ்குவிலிருந்து எபிரோனுக்கு போகிற வழியில் இருந்ததாகத் தெரிகிறது. சாலேம், சீயோனுக்குச் சமமாக கூறப்பட்டுள்ளது. சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய வாசஸ்தலமும் இருக்கிறது (சங். 76:2).