« Back to word list

தாத்தான் (Dathan)

இவன், ரூபன் வம்சத்தவனான எலியாப் என்பவனின் குமாரன் (எண் 26:9).

இவனும், சகோதரனான அபிராமும், லேவியனான கோராகோடு சேர்ந்து, மோசே, ஆரோன் என்பவர்களுக்கெதிராகக் கலகம்

பண்ணினார்கள் (எண். 16:1-35, 26:9). இதினிமித்தம் பூமி தன் வாயைத்திறந்து, அவர்களையும், அவர்களுடைய குடும்பத்தாரையும், பொருள் பண்டங்களையும் விழுங்கியது (எண். 26:10; சங். 106:17).

« Prev 321 / 564 Next »