« Back to word list

நிக்கொலாய் மதஸ்தர் (Nicolaitans)

ஆதிக் கிறிஸ்தவ மதபேத சமயத்தார். வெளிப்படுத்தின விசேஷத்தில் இவர்களுடைய போதகத்தையும், கிரியைகளையும் இயேசு வெறுக்கிறதாகச் சொல்லியுள்ளது (வெளி. 2:6-15).

இவர்களுடைய கொள்கை இஸ்ரவேலைப் பாவம் செய்யப் பண்ணின பிலேயாமின் போதனைக்குச் சம்பந்தப்பட்டதெனத் தெரிகிறது (வெளி. 2:14,15).

அப். 6:5இல் சொல்லப்பட்ட நிக்கொலாய் என்பவன் இந்தச் சமயத்தைத் தொடங்கினவன் என்பதற்கு அத்தாட்சியில்லை.

« Prev 364 / 564 Next »