பத்சேபாள் (Bathsheba)
(ஆணையின் மகள்)
இவள் எலியாமின் குமாரத்தி. ஏத்தியனான உரியாவின் மனைவி (2 சாமு.11:3). அம்மியேலின் குமாரத்தி “பத்சுவாள்" என்றும் சொல்லியுள்ளது (1 நாளா. 3:5).
உரியா, யோவாபின் கீழ் அம்மோனியருக்கு விரோதமாய் ரப்பாவில் யுத்தம் செய்யும் நாள்களில், தாவீது உரியாவின் மனைவியாகிய பத்சேபாளை அழைப்பித்து, அவளோடு சயனித்தான். அதன்பின் உரியாவைக் கொன்று, பத்சேபாளைத் தனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டான். இதினிமித்தம் கர்த்தர் நாத்தான் தீர்க்கதரிசியைக் கொண்டு தாவீதைக் கடிந்துகொண்டார் (2 சாமு. 12:12,13).
தாவீதின் வயோதிப காலத்தில் பத்சேபாள் நாத்தானுடைய உதவியோடு, சாலொமோனை இராஜாவாக்கக் காரணமாயிருந்தாள் (1இரா.1:30-39).
பின்பு அதோனியா பத்சேபாளிடம் கேட்டபடி அவன் அபிஷாகை விவாகம்பண்ண உத்தரவு கொடுக்க வேண்டுமென்று, சாலொமோனிடம் கேட்டாள். இது சிங்காசனத்தையும் எடுக்க நோக்கமான காரியமென்றெண்ணி, சாலொமோன் அதோனியாவைக் கொன்றான் (1 இரா. 2:19-25).
தாவீது உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றாள் என்று குறித்துள்ளது (மத். 1:6).