« Back to word list

பிலிப்பி (Philippi)

மக்கதோனியாவின் கிழக்குப் பக்கமாயிருந்த ஒரு பட்டணம். பவுலின் இரண்டாம் சுவிசேஷப் பிரயாணத்தில் மக்கதோனியா தேசத்தான் ஒருவன் தன்னை அவ்விடம் வந்து உதவி செய்யும்படி கேட்டதாகத் தரிசனத்தில் கண்டு, பிலிப்பி பட்டணத்துக்குப் போனான் (அப். 16:9- 12). இவர்கள் அங்கே போய் ஓர் ஆற்றினருகே உபதேசித்த நாள்களில், தியத்தீரா ஊராளாகிய லீதியாள் குணப்பட்டு, அவளும் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றார்கள் (அப். 16:14,15).

பிற்பாடு குறி சொல்லுகிற ஆவிபிடித்த ஒரு பெண், பல நாள்களாய் அவர்களைக் குறித்து "இந்த மனுஷர் தேவனுடைய ஊழியக்காரர்" என்று சொன்னாள். பவுல் அந்த ஆவியை அதட்டி துரத்திவிட்டான். அப்பொழுது ஜனங்கள் கலகம் பண்ணி, பவுலையும் சீலாவையும் பிடித்து அடித்து சிறைச்சாலையில் வைத்தார்கள். அன்று இரவு சிறைச்சாலைக் கதவு பூமியதிர்ச்சியினால் திறவுண்டது. சிறைச்சாலைக்காரன் இந்த அதிசயத்தைக் கண்டு, பயந்து அவர்களை உபசரித்தான். அவர்களுடைய போதனையைக் கேட்டு சிறைச் சாலைக்காரனும், அவன் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றார்கள். மறுநாள் அப்போஸ்தலர் விடுதலையாக்கப்பட்டு, புறப்பட்டுப் போனார்கள் (அப். 16:16-40).

பவுல் திரும்பவும் மூன்று தடவைகளில் இந்த இடத்துக்குப் போனதாகத் தெரிகிறது (2 கொரி. 2:13; அப். 20:3; 1 தீமோ. 1:3).

பவுல் தெசலோனிக்கேயிலிருக்கையில் பிலிப்பி சபையார் பவுலுக்கு உபகாரமனுப்பினார்கள் (பிலி. 4:16).

பவுல் இந்தச் சபையாருக்கு ஒரு நிருபம் எழுதினான் (பிலி. I:I).

செசரியா-பிலிப்பி (Caesarea Philippi)

இது பலஸ்தீனாவில் வட கோடியிலுள்ள பட்டணம். பேதுரு இயேசுவின் பேரில் சொன்ன அறிக்கையும், அவர் கொடுத்த உத்தரவும் இங்கே நடந்தது (மத். 16:13-20). அவர் மறுரூபமானதும் இங்கே (மத். 17:1-13).

மகா ஏரோதின் மகனாகிய பிலிப்பு இந்தப் பட்டணத்தைப் பெரிதாகவும் சிறப்பாகவும் கட்டி, சீசர் என்னும் இராயனுடைய பெயரையும், தன்னுடைய பெயரையும் சேர்த்து, "செசரியா-பிலிப்பி" என்று பேரிட்டான். இயேசு சொஸ்தமாக்கின பெரும்பாடுள்ள ஸ்திரீ இவ்வூராளென்று சொல்லப்படுகிறது (லூக்கா. 8:43-48).

இயேசு போயிருந்த அதிகத் தூரமான இடம், எகிப்தை விட இதுவே என்று எண்ணப்படுகிறது.

« Prev 404 / 564 Next »