« Back to word list

பெயெர்செபா (Beersheba)

(ஆணையின் கிணறு)

பெலிஸ்தியா தேசத்தில் தென் பக்கத்திலுள்ள ஒரு பூர்வீக நாடு. "தாண் முதல் பெயர் செபா மட்டும்" (நியா. 20:1) என்ற பேச்சு. இது பலஸ்தீனா தேசத்தின் தென் எல்லை என்பதைக் காட்டுகிறது. அபிமலேக்கும் ஆபிரகாமும் ஒரு துரவைப் பற்றி ஆணையிட்டதால் இது பெயெர்செபா எனப்பட்டது (ஆதி. 21:33). பின்பு ஆபிரகாம் இங்கே குடியிருந்தான் (ஆதி. 22:19).

ஈசாக்கும் இவ்விடத்தில் துரவு வெட்டித் தண்ணீர் கண்டதினிமித்தம் 'செபா' என்று பேரிட்டான். ஆகையால் அந்த ஊரின் பேர் பெயெர்செபா எனப்பட்டது (ஆதி. 26:33).

யாக்கோபு பெயெர்செபாவிலிருந்து புறப்பட்டு ஆரானுக்குப் பிரயாணமானான் (ஆதி. 28:10). பின்பு லாபானை விட்டுப் புறப்பட்ட பின்பும் பெயெர்செபாவுக்குப் போய், தேவனுக்குப் பலியிட்டான் (ஆதி. 46:1).

யோசுவா இந்த இடத்தை யூதா புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தான். சீட்டுப் போட்ட வேளையில், இது சிமியோனுக்குக் கிடைத்தது (யோசுவா. 15:28; 19:2).

சாமுவேலின் குமாரர் பெயெர்செபாவில் நியாயாதிபதி களாயிருந்தார்கள் (1 சாமு. 8:2).

யேசபேல் எலியாவைப் பயமுறுத்தினபோது, அவன் பெயெர்செபாவுக்குப் புறப்பட்டுப் போனான் (1 இரா. 19:3).

இங்கிருந்த விக்கிரக ஆராதனையைப் பற்றி ஆமோஸ் கண்டித்துப் பேசுகிறான் (ஆமோஸ். 8:14).

சிறையிருப்பின் பின்பு பெயெர்செபாவும் அதன் கிராமங்களும் குடியேற்றப்பட்டன (நெகே. 11:27).

தற்காலத்தில் இது செழிப்பான தேசமாயிருக்கிறதெனச் சொல்லுகிறார்கள்.

« Prev 422 / 564 Next »