« Back to word list

மத்தனியா (Mattaniah)

(யேகோவாவின் கொடை)

1. பாபிலோன் இராஜா யோயாக்கீனைச் சிறை பிடித்துக் கொண்டு, அவனுக்குப் பதிலாக அவனுடைய சிறிய தகப்பனாகிய மத்தனியாவை இராஜாவாக்கி, சிதேக்கியா என்று மறு பேரிட்டான் (2 இரா. 24:17).

2. ஆசாபின் சந்ததியான். ஸ்தோத்திரப் பாட்டுகளைத் துவக்கின ஒரு தலைவன் (1 நாளா. 9:15; நெகே. 11:17).

3. தேவாலய ஊழியத்துக்கென்று தாவீது பிரித்து வைத்த ஏமானின் குமாரரில் ஒருவன் (1 நாளா. 25:4).

4. எசேக்கியாவின் நாள்களில் தேவாலயத்தைச் சுத்திகரித்தவர்களில் ஒருவன் (2 நாளா. 29:13).

5. அந்நிய ஜாதியான ஸ்திரீகளைச் சேர்த்துக் கொண்ட நான்குபேர் (எஸ்றா. 10:26,27,30,37).

« Prev 441 / 564 Next »