« Back to word list

மத்தேயு (Matthew)

(யேகோவாவின் கொடை)

இவன் ஓர் அப்போஸ்தலனும், சுவிசேஷகனுமாய் இருந்தான். அப்போஸ்தல ஊழியத்துக்கு அழைக்கப்படுமுன் இவன் பெயர் லேவி (மத். 9:9). அல்பேயுவின் மகன் (மாற்கு. 2:14). ஓர் ஆயக்காரன் (மத்.10:3).

இவன் ஆயத்துறையில் இருக்கையில் இயேசு தமக்குப் பின்வரும்படி சொல்லவே, அவன் எழுந்து போனான். பின்பு இயேசுவுக்கும் மற்றவர்களுக்கும் தன் வீட்டில் ஒரு விருந்து கொடுத்தான் (மத். 9:9,10; மாற்கு. 2:15; லூக்கா. 5:29).

இயேசு பரலோகம் போன பின் மத்தேயு பலஸ்தீனாவில் அநேக வருடங்களாய்ப் பிரசங்கித்தபின், பிற தேசங்களுக்குப் போய் சுவிசேஷத்தைக் கூறினான் என்று சொல்லப்படுகிறது.

இவன் தன்னுடைய சுவிசேஷத்தை முதலில், எபிரெய பாஷையில் எழுதி, சில வருடங்களுக்குப் பின் (கி.பி. 60இல்) கிரேக்க பாஷையில் பூரணப்படுத்தி எழுதினான் என்று தெரிகிறது. பாரம்பரியத்தின்படி இவன் எத்தியோப்பியாவில் கல்லெறியப்பட்டு இரத்த சாட்சியாக மரித்தான்.

« Prev 443 / 564 Next »