யோதாம் (Jotham)
(யேகோவா பரிபூரணமானவர்)
1. இவன் கிதியோனின் கடைசி மகன். அபிமெலேக்கு கிதியோனின் குமாரர் எழுபது பேரைக் கொலை செய்தபோது, இவன் ஒளித்திருந்து தப்பிக் கொண்டான் (நியா. 9:5). சீகேமியர் அபிமெலேக்கை இராஜா வாக்கினதை யோதாம் அறிந்து "மரங்கள் ஒரு முட்செடியை இராஜா வாக்கினதற்கு" ஒப்பிட்டு, ஒரு கட்டுக் கதையை அவர்களுக்குச் சொன்னான் (நியா. 9:6-15). அதன் பின் யோதாம் அபிமெலேக்குக்குப் பயந்து தப்பியோடி பேயேருக்குப்போய் குடியிருந்தான் (நியா.9:21). மூன்று வருடங்களுக்குப்பின் யோதாமின் சாபம் பலித்தது (நியா. 9:57).
2. யூதாவின் 12ஆம் இராஜா (கி.மு. 751-735). உசியாவின் குமாரன். இவனுடைய தகப்பன் குஷ்டரோகியாயிருந்தபடியால் அவனோடு கூட இராஜாவாயிருந்தான். 25 வயதில் இராஜாவாகி பதினாறு வருடம் அரசாண்டான். இவன் ஆலயத்தில் ஓர் உயர்ந்த வாசலைக் கட்டி, யூதாவில் பட்டணங்களை எழுப்பி, அம்மோன் இராஜாவோடு யுத்தம்பண்ணி மேற்கொண்டு, தன் வழிகளைக் கர்த்தருக்கு முன் நேராக்கினான். பின்பு மரித்து தாவீதின் பட்டணத்தில் அடக்கம்பண்ணப்பட்டான் (2 இரா. 15:32,33, 38; 2 நாளா. 27:3-9).
3. காலேபின் சந்ததியான் (! நாளா, 2:47).