« Back to word list

ராகாப் (Rahab)

இவள் எரிகோ பட்டணத்தில் ஒரு சத்திரம் வைத்திருந்தாள். யோசுவா அனுப்பின வேவுக்காரர் இவள் வீட்டுக்குப் போனார்கள். எரிகோவின் இராஜா அவர்களைப் பிடிக்க ஆள்களை அனுப்பினபோது, இவள் அவர்களை ஒளித்து வைத்து, வேறே வழியாய் அனுப்பிவிட்டாள் (யோசுவா. 2:1, 22).

இதினிமித்தம் எரிகோ பட்டணம் பிடிக்கப்பட்ட வேளையில், இவளும் இவளுடைய குடும்பத்தார் யாவரும் தப்புவிக்கப் பட்டார்கள். பின்பு இவர்கள் இஸ்ரவேலரோடு சேர்ந்து கொண்டார்கள் (யோசுவா. 6:16-25).

ராகாபுடைய விசுவாசத்தின் மேன்மையும், அவள் கிரியையினால் நீதியுள்ளவளாக்கப்பட்டதும் வேதாகமத்தில் குறித்துள்ளது (எபி. 11:31; யாக். 2:25).

அவள் தாவீதின் முன்னோடியாளென்றும், அவளுடைய வம்சத்தில் இயேசு பிறந்தாரென்றும் சொல்லியுள்ளது (மத். 1:5).

2. ராகாப் என்பதின் அர்த்தம் மேட்டிமை, அகங்காரம். இந்தக்கருத்தோடு எகிப்தைக் குறித்தும் சொல்லியுள்ளது (சங். 87:4, 89:10) ஏசாயா. 51:9இல் இராகாப் என்று சொல்லியுள்ளது.

« Prev 532 / 564 Next »