ராஜ்யம் (Kingdom)
வேதாகமத்தில் பல இடங்களில் உலக இராஜ்யத்தைப் பற்றிக் குறித்துள்ளது. மெனாகேம் இராஜ்யபாரத்தைத் தன் கையில் பலப்படுத்தினான் (2 இரா. 15:19). ஆனால் இராஜ்யம் என்பது வேறு கருத்துமுள்ளது, "இராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர்" (சங். 22:28). உமது இராஜ்யம் சதாகாலங்களிலுமுள்ளது (சங். 145:13). இவை சர்வலோகம் தேவனால் ஆளப்படுகிறதென்பதைக் கருதுகின்றன.
வேறே இராஜ்யங்களுமுண்டு. கர்த்தருடைய ஜெபத்தில் "உம்முடைய இராஜ்யம் வருவதாக" (மத். 6:10) என்பது ஆவிக்கடுத்த கருத்துள்ளது. இது இயேசு சொன்ன உவமைகளில் "பரலோக இராஜ்யம்" என்று மத். 13:24, 31, 33-44லும் "தேவனுடைய இராஜ்யம்" என்று மாற்கு 4:11,26; லூக்கா. 14:15லும் குறித்துள்ளது. இயேசுதாமே தமது இராஜ்யம்" இவ்வுலகத்துக்குரியதல்ல என்று சொன்னார் (யோவான் 18:36). இது உலகத்திலுள்ள கிறிஸ்துவின் இராஜ்யம். உலகத்தில் எழும்பி, என்றென்றைக்கும் நிலைநிற்கும் (தானி. 2:44; வெளி. 20:4-6) என்பதும் தெரியவருகிறது.