ஸ்தேவான் (Stephen)
(கிரீடம்)
1. ஆதிச் சபையார் தெரிந்து கொண்ட ஏழு உதவிக்காரரில், ஸ்தேவான் விசேஷித்தவன். அக்காலத்தில் கிரேக்க பாஷை பேசின அநேக யூதர் கிறிஸ்தவர்களானார்கள். எருசலேம் சபையிலுள்ள விதவைகளுக்குப் பந்தி விசாரணை செய்யும்படி ஏழுப் பேரைத் தெரிந்து கொண்டார்கள் (அப். 6:1-6).
அவர்களில் ஸ்தேவான் விசுவாசமும், பரிசுத்த ஆவியும், வல்லமையும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள் அற்புதங்களும், அடையாளங்களும் செய்தான். அப்பொழுது "லிபர்த்தீனர்” என்னும் கூட்டத்தார் அவனுக்கு விரோதமாய் எழும்பி. அவனை ஆலோசனைச் சங்கத்தார் முன் கொண்டு போனார்கள் (அப். 6:5, 8-15).
அத்தருணத்தில் ஸ்தேவான் ஒரு நீண்ட பிரசங்கம் செய்தான். யூதர்கள் அதைக் கேட்டு மூர்க்கம் அடைந்து அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.
"ஆண்டவரே இவர்கள் மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும்" என்று மிகுந்த சத்தமிட்டுச் சொல்லி, ஸ்தேவான் நித்திரை அடைந்தான் (அப். 7:5; 54-60).
இவ்வண்ணமாய் ஸ்தேவான் கிறிஸ்தவர்களில் முதன் முதல் இரத்த சாட்சியானான். ஸ்தேவான் நிமித்தமாய் எழும்பின உபத்திரவத்தினாலே சீப்புரு, அந்தியோகியா முதலிய இடங்களில் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது (அப். 11:19-22).
ஸ்தேவான் (Stephanas)
கொரிந்து சபையைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவன். இவனுடைய வீட்டாருக்குப் பவுல் ஞானஸ்நானம் கொடுத்தான் (1 கொரி. 1:6). இவர்கள் அகாயா நாட்டில் முதற்பலனானவர்கள் (1 கொரி. 16:15). ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு என்பவர்களும், எபேசுவுக்குப் பவுலைச் சந்திக்கப் போய், உபகாரங்களும் கொடுத்தார்கள் (1 கொரி. 16:17).