Download and use this Tamil Christian Ebook PDF of 1759 Tamil Bible – First Printed Bible in Srilanka to read in any electronic devices like mobile, ipad, laptop, etc
Published Year: 1759
Printed at: Srilanka / இலங்கை
Scanned By: Google
PDF Created & Made Available Online by: Yesudas Solomon
முதல் பக்கம் தற்கால தமிழ் எழுத்துக்களில்:
புதிய ஏற்பாடு அல்லது யெசுஸ்கிறிஸ்த்துசுடைய புதிய பொருத்தத்திர சகலமான பொத்தகங்கள்
இதுகள்
இந்த இலங்கைத் தீவுக்கு உத்தம பிரபுத்துவமானவர்கள் பாரமாக்கின கட்டளையார கிரெக்க ஆதிபாஷையினின்று தமிட்படுத்தந் திருச்சபையினது கட்டளையின்படியே அடுத்ததாகப் பிளைதீர்க்கவும் பட்டிருக்குது.
இந்தப் பொத்தகங் கொழும்பில் உத்தம கொம்பஞ்ஞியவினுடைய நியமமான அச்சுக்கூடத்திலே 1759 ஆண்டிலே பதித்து முடிக்கப்பட்டுது.
சிறப்பு / Special about this Bible:
இலங்கையில் அச்சடிக்கப்பட்ட முதல் வேதம் இந்த கிறிஸ்தவ வேதாகமம் தான். இது 1759 ஆம் ஆண்டு அச்சானது. இதற்கு முன்னதாக 1739 ஒரு சிறுநூல் அச்சானது, ஆனால் அது வேதாகமம் கிடையாது.
This Tamil Bible is the first ever printed Bible in Srilanka in the Year 1759. There was a small booklet printed little early by 1739, but that was not a Bible, instead, it had questions & answers, plus some portions of the Bible.
மொழிபெயர்த்தது / Translated By:
பல பேர்கள் இந்த மொழிபெயர்ப்பில் பங்குப் பெற்றதாக முகவுரை பகுதியில் நீங்கள் வாசித்து அறியலாம். பிலிப்புஸ் தே மெல்லோ (Philip De Melho) என்பவர் மேற்பார்வையில் புதிய ஏற்பாடு முழுவதும் கிரேக்கத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்து முடிக்கப்பட்டது. மொழிபெயர்ப்பு பணிமுடிந்தவுடன் திருச்சபையின் உத்தரவின் பேரில் பிழைத்திருத்தமும் செய்யப்பட்டது. பிழைத்திருத்தம் செய்தவர்கள் தான் இந்த புத்தகத்தில் வரும் முகவுரையை எழுதியதாக தெரிகிறது. அவர்களின் பெயரும் முகவுரையின் கடைசியில் வருகிறது.