பாவத்தை மூடுகிறோமா? அல்லது வெளிப்படுத்தி மீட்கப்படுகிறோமா?

ஆடியோ/வீடியோ

மனப்பாட வசனம்

தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும், என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். - (சங்கீதம் 139:23 )

இன்றைய தியானம்

மனித இயல்பு பாவத்திலிருந்து மனந்திரும்புவதைக்காட்டிலும் பாவத்தை மூடி மறைப்பதையே அதிகம் விரும்புகிறது. ஏதேனிலிருந்து இன்றுவரை, பலவீனங்களை மாற்றுவதற்கு பதிலாக மறைப்பதையே மனிதன் தேர்ந்தெடுத்தான். மூடி மறைப்பது தற்காலிக நிம்மதியைத் தரும்; ஆனால் காயம் ஆழமாகிக்கொண்டே போகும்.
தேவனுடைய அழைப்பு எப்போதும் நம்முடைய மீட்பிற்கே. அவர் நம்மை ஒளிக்குள் அழைக்க விரும்புகிறார் குற்றம் சாட்ட அல்ல, நம்மை மன்னித்து சுத்திகரிக்கவே, மனிதருக்கு முன் அவமானப்படுத்த அல்ல, தேவனுக்கு முன்பாக இரட்சித்து புதுப்பிக்கவே அவர் இருதயத்தை ஆராய்கிறார்.
மீட்பு தைரியத்தையும் வெளிப்படையான தன்மையையுமே கேட்கிறது, தேவனுக்கு முன் நாம் உண்மையில் யார் என்பதை வெளிப்படுத்தும் தைரியம் தான் அது. நம் மீறுதல்களை பாவங்களை பாதுகாப்பதை விட்டுவிட்டு, ஒப்படைக்கும் போதே கிருபை செயல்பட ஆரம்பிக்கிறது. உடைந்ததை உடைந்ததாக ஏற்றுக்கொள்ளாதவரை, தேவன் அதை சரி செய்யப்போவதில்லை.
பாவத்தை மூடுதல் நம்மை எப்போதும் குற்ற உணர்ச்சி மற்றும் பதட்டத்தில் வைத்திருக்கும். பாவமன்னிப்பாகிய மீட்போ மகிழ்ச்சி, சமாதானம், திருப்தியுடனான மாற்றத்திற்கு நம்மை கொண்டு செல்கிறது.

தாழ்மை மற்றும் உண்மை சந்திக்கும் இடத்தில் தான் சுகம் பெருகும். பாவத்தை மறைப்பது பிரிவினையையும், ஒப்புக்கொள்வது ஐக்கியத்தையும் கொண்டு வரும். நம்முடைய பாவங்களை அதிக ஊழியத்தில் ஈடுபடுவதால் மறைத்து விட முடியாது. பாவம் செய்யாதவர் போல நடிப்பது நாசமோசத்துக்கு ஏதுவாக நம்மை நடத்திவிடும். தேவனின் கேள்வி
“எவ்வளவு நன்றாக கிரியை செய்தோம்?” என்பதல்ல. “எவ்வளவு உண்மையாய் அவருக்கு முன்னே இருக்கிறோம்?” என்பதே.

அத்தி இலைகள் எப்போதும் நிர்வாணத்தை மூடப்போவதில்லை. அது நிரந்தரமற்ற மனித முயற்சி. தற்காக்கும் முயற்சியால் ஒன்றும் நடந்து விடாது. தேவனிடம் நம்மை ஒப்புக்கொடுத்தால், நம்மை தாழ்த்தி பாவங்களை வெளிப்படுத்தி சிலுவையண்டை வந்தால், தேவன் நம்மை சுத்திகரித்து வெளிச்சமாக்கி, சாட்சியாக மாற்றி தனக்கென்று பயன்படுத்துவார்.“மூடப்பட்ட பாவம் சுமையாக இருக்கும்; மன்னிக்கப்பட்ட பாவம் சாட்சியாக மாறும்.”

இன்றைய மேற்கோள்

“தேவன் நம்மை வெளிப்படுத்துவது அவமானப்படுத்த அல்ல; மீட்கவும் சுகப்படுத்தவுமே.” - Charles Finney

பரிந்துரைக்கப்படும் புத்தகம்

மனந்திரும்புதல் - பாகம் - 1

by -

"பலர் மனந்திரும்புவது போல காண்பிக்கிறார்கள். ஆனால் அது உண்மையான மனந்திரும்புதல் அல்ல. இது ஒரு மிக ஆபத்தான நிலை. பாவத்தின் பாதையில் தொடர்வதைவிட, பாவத்திலிருந்து திரும்பியதுபோல் தோன்றமளித்து, தேவனுக்கு அன்பாக இருக்கின்றேன் என ஏமாற்றுவது மிகவும் அபாயகரமானது."

— -
Read More

ஜெபம்

ஆண்டவரே, நான் மறைத்து வைத்த அனைத்தையும் உமது ஒளிக்குள் கொண்டு வருகிறேன். என் பாவங்களை மூட முயலாமல், உமது கிருபையால் மீட்கப்பட எனக்கு உதவும். என் இருதயத்தை ஆராய்ந்து, உமக்குப் பிரியமானதாக என்னை மாற்றுங்கள். ஆமென்.

உங்களுக்கு ஒரு வார்த்தை

தேவன் மீட்க விரும்புவதை, நீங்கள் இனி மூட முயலாதீர்கள்.மனந்திரும்புதல் என்பது ஒரு ஆழமான, பரிசுத்தமான அனுபவம் என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். ஆனால் வேதம் அதற்கெதிராக உள்ள ஒரு உண்மையையும் நமக்கு கற்றுக்கொடுக்கிறது.

ஆசிரியர்

Pr. Maria Joseph

919243183231