அகித்தோப்பேல் (Ahithophel)
(மதிகெட்ட சகோதரன்)
இவன் கீலோவு ஊரான். தாவீதுடைய விசேஷ ஆலோசனைக் காரன் (2 சாமு. 15:12; 16:23).
அப்சலோம், தாவீதுக்கு விரோதமாகக் கலகம் செய்தபோது, அகித்தோப்பேலும் அவனைச் சேர்ந்துகொண்டானென்று தாவீது அறிந்தபோது, “கர்த்தாவே அவனுடைய ஆலோசனையைப் பயித்திய மாக்கிவிடுவீராக" என்றான் (2 சாமு. 15:31).
அகித்தோப்பேலின் யோசனைப்படி, அப்சலோம் தன் தகப்ப னுடைய மறுமனையாட்டிகளிடம் பிரவேசித்தான் (2 சாமு. 16:22)
மேலும் அவன் சொன்ன ஆலோசனையை, அப்சலோம் கேளாமல் அற்கியனாகிய ஊசாயின் ஆலோசனையைக் கேட்டதினால், தன் யோசனையின்படி நடக்கவில்லையென்று அகித்தோப்பேல் கண்டபோது, தன் வீட்டுக்குப்போய் நான்று கொண்டு செத்தான் (2 சாமு. 15:31-34; 2 சாமு. 17:23). ஆகவே அவனைப் பழைய ஏற்பாட்டின் யூதாஸ்காரியோத்து என்றும் சொல்லலாம்.