« Back to word list

அகினோவாம் (Ahinoam)

(மனோகரமான சகோதரி)

1. இவள் சவுலுடைய மனைவி அகிமாசின் குமாரத்தி (1 சாமு. 14:50).

2. தாவீது, யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாவை விவாகம் பண்ணினான் (1 சாமு 25:43). இவளும், நாபாலின் மனைவியாகிய அபிகாயிலும், தாவீது இராஜாவாக வருமட்டும் அவனுடைய மனைவிகளாயிருந்தார்கள். இவர்களிருவரும் சிக்லாகிலிருக்கும்போது, அமலேக்கியர் சிறை பிடித்துப் போனபொழுது, தாவீது அவர்களை விடுவித்தான் (1 சாமு. 30:5-19).

தாவீதுடைய மூத்த குமாரனாகிய அம்னோனை அகினோவாம் பெற்றாள் (2 சாமு. 3:20; 1 நாளா. 3:1).

« Prev 6 / 564 Next »