அகிமெலேக்கு (Ahimelech)
(இராஜாவின் சகோதரன்)
1. நோபிலிருந்த ஆசாரியனாகிய அகிதூபின் குமாரன் (1 சாமு. 22:9). தாவீதின் ஆசாரியனாகிய அபியத்தாரின் குமாரனென்று 2 சாமு. 8:17இல் குறித்துள்ளது.
அகிமெலேக்கு நோபில் ஆசாரியனாயிருந்தபோது தாவீதுக்கு உதவி செய்தானென்று கேள்விப்பட்டு, சவுல் ஆசாரியராயிருந்த 85 பேரைக் கொல்லுவித்தான் ( 1 சாமு. 22:18)
2.ஏத்தியனாகிய அகிமெலேக்கு. தாவீது சவுலுக்குத் தப்பி வனாந்தரத்திலிருந்த நாள்களில், இவன் தாவீதோடிருந்தான் (1 சாமு. 26:6)