« Back to word list

அகிமாஸ் (Ahimaaz)

(கோபத்தின் சகோதரன்)

1. சாதோக்கின் குமாரன். வேகமாய் ஓடுகிறவனென்று பேர் பெற்றவன். அப்சலோம் கலகம் செய்த நாள்களில் இவனும், அபியத்தார் மகன் யோனத்தானும், தாவீதுக்கு உதவி செய்தார்கள் (2 சாமு.15:27,36).

அப்சலோம் தோல்வியடைந்த செய்தியை இவன் தாவீதுக்கு முதன்முதல் கொண்டுவந்தான் (2 சாமு. 18:19-32).

2. நப்தலியிலிருந்த சாலொமோனின் விசாரிப்புக்காரன். சாலொமோனின் குமாரத்தியாகிய பஸ்மாத் என்பவளை விவாகம் பண்ணினான். (1 இரா. 4:15).

3. சவுலுடைய மனைவியாகிய அகினோவாம் அகிமாசின் குமாரத்தி (1 சாமு. 14:50).

« Prev 7 / 564 Next »