அத்தாலியாள் (Athaliah)
(கர்த்தர் மேன்மையடைகிறார்)
1. இஸ்ரவேலின் இராஜாவாகிய ஆகாப், யேசபேல் என்பவர் களின் மகள். யூதா இராஜாவாகிய யோராம் இவளை விவாகம் செய்தான் (2 இரா. 8:18,26; 2 நாளா. 21:6). இவளுடைய தாயாகிய யேசபேலிலிருந்த பெனிக்கேயாளின் குணக்குறிகள் இவளிலும் காணப்பட்டது.
யோராம் மரித்தபோது அவனுடைய குமாரன் அகசியா இராஜாவானான். ஒரு வருஷத்தில் யெகூ அகசியாவைக் கொன்று போட்டான் (2 இரா. 8:25; 9:27).
அப்பொழுது அத்தாலியாள் இராஜவம்சத்தாராகிய தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றுபோட்டு, தானே இராஜ்ய பாரத்தை எடுத்துக்கொண்டாள் (2 நாளா. 22:10). யோராமின் குமாரர் கொல்லப்பட்டபோது, அவனுடைய இளைய மகனாகிய யோவாசை, யோராமின் சகோதரியாகிய யோசேபியாத் தப்பவைத்தாள் (2 நாளா. 22:11).
"அந்தப் பொல்லாத ஸ்திரீ" என்று வேதாகமத்தில் சொல்லி இருப்பதே இந்த அத்தாலியாளின் ஞாபகக் குறி (2 நாளா. 24:7). 2. அத்தாலியா என்ற பெயர் 1 நாளா. 8:26லும், எஸ்றா 8:7லும் காணப்படுகிறது.