அனனியா (Ananiah, Ananias)
(கர்த்தர் கிருபையுள்ளவர்)
1. அசரியா என்பவனின் பாட்டன் (நெகே. 3:23).
2. நோப் ஆதசேர் என்னும் பென்யமீன் கோத்திரத்துப் பட்டணங்களுக்கு அருகில் இருந்த ஒரு பட்டணம் (நெகே. 11:32).
3. அரண்மனைத் தலைவனாகிய அனனியாவை எருசலேமின் காவல் விசாரணைக்கு நெகேமியா ஏற்படுத்தினான் (நெகே. 7:2).
4. எரேமியா தீர்க்கதரிசியை எதிர்த்து நின்ற, ஒரு பொய்த் தீர்க்கதரிசி. இவன் கர்த்தருக்கு விரோதமாய் பேசினபடியால் எரேமியாவின் சொற்படி அவ்வருடத்திலேயே செத்துப்போனான் (எரே.28:17).
5. தானியேலோடுகூட பாபிலோனுக்குப் போன கூட்டாளிகளி லொருவன் (தானி. 1:7,19).
6. சப்பீராளின் புருஷன் இவர்களிருவரும் எருசலேம் சபையைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள். இவர்கள் தங்கள் காணியாட்சியை விற்று, ஒரு பங்கை வஞ்சித்து வைத்துக்கொண்டு, மீதியை பேதுருவிடம் கொடுத்தபோது, அவன் அவர்களுடைய பொய்யை வெளிப் படுத்தினதின் பயனாக இருவரும் மரித்தார்கள் (அப். 5:1-10).
7. தமஸ்குவிலிருந்த தேவ பக்தியுள்ள ஒரு மனுஷன். கர்த்தரின் சொற்படி இவன் சவுலினிடம் போய், அவன் பார்வையடையும்படி செய்து, ஞானஸ்நானம் கொடுத்து, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் படியும் சொன்னான் (அப். 9:10-18).
8. ஏரோது இராஜா ஏற்படுத்தின ஒரு பிரதான ஆசாரியன் (கி.பி. 47-59). இவன், சமாரியரைக் கொடூரமாய் நடத்தினானென்ற குற்றச்சாட்டை விசாரணைச் செய்வதற்காக கிலவுதியுராயனிடம் ரோமாபுரிக்கு, அனுப்பப்பட்டான். அவன் குற்றவாளி யென்று காணப்படாததினிமித்தம் திரும்பவும் ஆசாரிய ஊழியம் செய்தான். ஆனால் மறுபடியும் அவன் அநியாயங்கள் செய்தபோது ஜனங்களால் கொல்லப்பட்டான். இவன் ரோமருடைய ஆளுகைக்குச் சார்பாயிருந்தவன்.
பேலிக்ஸ் இராஜா முன் பவுலுக்கு விரோதமாய்க் குற்றஞ்சாட்டின பிரதான ஆசாரியன் இவன். பவுல் “வெள்ளையடிக்கப்பட்ட சுவரே” என்று இவனைப் பார்த்துச் சொன்னான் (அப். 23:2,3; 24:1).