« Back to word list

அன்னா (Anna)

(கர்த்தரின் கிருபை)

காய்பாவின் மாமன். கி.பி. 7 முதல் 16 வரை பிரதான ஆசாரியனாய் இருந்தான். இந்த அன்னாசேத் என்பவனின் மகன். கி.பி. 7இல் பிரதான ஆசாரியனாக நியமிக்கப்பட்டு கி.பி. 13இல் தள்ளப்பட்டான்.

வேதாகமத்தில் சில இடங்களில் இவர்கள் இருவரும் ஒரே தருணத்தில் ஆசாரியராக இருந்ததாகக் கூறியுள்ளது (லூக்கா 3:2). வேறு சில இடங்களில் ஒருவனை மாத்திரம் குறித்துள்ளது. ஒருவேளை இயேசு விசாரணை செய்யப்பட்ட வேளையில் காய்பா பிரதான ஆசாரியனும், அன்னா ஆலோசனைச் சங்கத்தின் தலைவனாகவும் இருந்திருக்கலாம்.

அன்னாவுடைய குமாரர் ஐந்து பேரும், மருமகன் காய்பாவும் அந்த உத்தியோகத்தில் இருந்தார்கள்.

இயேசுவைக் கெத்செமனேத் தோட்டத்தில் பிடித்தப்பின், முதலாவதாக அன்னாவிடம் கொண்டுபோனார்கள் (யோவான் 18:13). இவன் பிரதான ஆசாரியன் என்று யோவான் 18:19ல் கூறியுள்ளது.

ரோமர் பிரதான ஆசாரியர்மாரை தங்கள் இஷ்டப்படி ஏற்படுத்தியும், தள்ளியும் வந்தபோதிலும், யூதர் அந்தப் பதவி ஜீவிய காலத்துக்குரியதென்று வாதித்தார்கள்.

« Prev 25 / 564 Next »