அன்னாள் (Anna, Hannah)
(கர்த்தரின் கிருபை)
1. ஆசேர் கோத்திரத்தாள். பானுவேலின் குமாரத்தி. இவள் ஒரு தீர்க்கதரிசி. நூறு வயதுக்கு மேலே இருந்த இவள், இரவும், பகலும் தேவாலயத்தில் ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தாள் (லூக்கா. 2:36).
இவளும் சிமியோனைப்போல, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்தவள். இவள் இயேசு என்னும் பிள்ளையைத் தேவாலயத்தில் கண்டு, அவரே மேசியா என்று கூறினாள் (லூக்கா. 2:36-38).
2. எப்பிராயீம் கோத்திரத்து, ராமதாயீம் ஊரானாகிய எல்க்கானா என்ற ஒருவன் இருந்தான். அவனுக்கு அன்னாள், பென்னினாள் என இரண்டு மனைவிகள் இருந்தார்கள். அன்னாளுக்கோ பிள்ளை இல்லை.
அன்னாள், தன் புருஷனோடு, வருடா வருடம் கர்த்தருக்குப் பலியிட சீலோவுக்குப் போவது வழக்கம். அவள் தனக்கு ஒரு ஆண்பிள்ளை கிடைத்தால், அவனைத் தேவ ஊழியத்துக்கு ஒப்புக்கொடுப்பதாக பொருத்தனை செய்து, ஜெபித்து வந்தாள். அப்படியே ஓர் ஆண் பிள்ளை கிடைத்தபோது "தேவன் கேட்டார்" என்ற அர்த்தமுள்ள சாமுவேல் என்னும் பெயரைக் கொடுத்தாள் (1 சாமு. 1:1-20).
பின்பு பெற்றோர் அந்தப் பிள்ளையை சீலோவுக்குக் கொண்டு போய், ஏலியிடம் கர்த்தருக்கென்று ஒப்புக் கொடுத்தார்கள் (1 சாமு. 1:24-28).அப்பொழுது அவள் பாடின ஸ்தோத்திரப்பாட்டு தீர்க்கத்தர்சன
வசனமாயிருந்தது (1 சாமு. 2:1-10). இங்கே முதன்முதல், அபிஷேகம் பண்ணப்பட்டவரைப் பற்றி கூறியுள்ளது.
அன்னாளுக்கு திரும்ப ஐந்து பிள்ளைகள் பிறந்தார்கள் (1 சாமு.2:21). அவள் வருடந்தோறும் சின்னச்சட்டையைத் தைத்து, சீலோவுக்குப்போய், அதைச் சாமுவேலுக்குக் கொடுத்தாள் (1 சாமு. 2:19).
இயேசு பிறந்தபோது, மரியாள் பாடின பாட்டு இவளுடைய பாட்டுக்கு ஒத்தது (லூக்கா. 1:46-55).