அபினதாப் (Abinadab)
பெருந்தன்மையின் பிதா)
1. பெலிஸ்தரின் நாட்டிலிருந்து கர்த்தரின் பெட்டி அனுப்பப்பட்டபோது, அதைக் கீரியாத்யாரீமின் மனுஷர் எடுத்து அபினதாபின் வீட்டிலே வைத்தார்கள் (1 சாமு. 7:1).
இருபது வருடங்களாய், அதாவது தாவீது கர்த்தரின் பெட்டியை எடுக்கும்வரை, அது இங்கே இருந்தது (1 நாளா. 13:7),
2. ஈசாயின் எட்டுக்குமாரரில் இரண்டாவதானவன். இவனும் சவுலோடு யுத்தத்திற்குப் போயிருந்த நாள்களிலே, தாவீது கோலியாத்தைக் கொன்றான் (1 சாமு. 17:13; 1 நாளா. 2:13).
3. சவுலின் குமாரரில் ஒருவன். இவனும், இவன் தகப்பன், சகோதரரும், கில்போவாவில் நடந்த யுத்தத்தில் கொல்லப் பட்டார்கள் (1 சாமு. 31:2).
4. அபினதாபின் குமாரன் சாலொமோனின் மணியகாரரில் தலைவன். இவன் சாலொமோனின் ஒரு குமாரத்தியை விவாகம் செய்தான் (1 இரா.4:11).