« Back to word list

அபிமெலேக்கு (Abimelech)

(இராஜாவின் தகப்பன்)

1. ‘அபிமெலேக்கு' கேராரின் இராஜாக்களுக்கு வழங்கின பெயர்.

ஆபிரகாம் கேராரில் தங்கியிருந்த நாட்களில் தன் மனைவி சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினால், அபிமெலேக்கு அவனைத் தன் அரண்மனைக்கு அழைப்பித்தான். தேவன் அவனுக்குச் சொப்பனத்தில் தோன்றி அவனை எச்சரித்தார். அப்பொழுது அவன் பொருள் பண்டங்களை ஆபிரகாமுக்குக் கொடுத்து, அவன் மனைவி யையும் ஒப்புவித்தான் (ஆதி. 20:1-8).

பின்பு தண்ணீர் விஷயத்தில் வாக்குவாதம் உண்டானபோது இருவரும் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டார்கள். அவர்கள் ஆணையிட்டுக்கொண்டபடியால், அந்த இடம் "பெயர் செபா'' எனப்பட்டது (ஆதி. 21:25-31).

2. அபிமெலேக்கு கேராரிலிருந்த ஒரு பெலிஸ்திய இராஜா. ஈசாக்கு, பஞ்சத்தினிமித்தம் அபிமெலேக்கிடம் கேராருக்குப் போனான். அங்கே ஈசாக்கு தன் மனைவியை தன் சகோதரி என்று சொன்னது பொய் என்று இராஜா அறிந்து அவனை கண்டித்தான். ஆனாலும் பின்பு அவனை அன்பாய் நடத்தினான்.

ஈசாக்கு கேராரிலிருக்கையில் தன் தகப்பன் வெட்டின துரவுகளைப் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டதினால், மறுபடியும் அவைகளைத் தோண்டினான். இதனிமித்தம் வாக்குவாதம் உண்டானபோது, அபிமெலேக்கும், ஈசாக்கும் பெயர்செபாவில் உடன்படிக்கை செய்துகொண்டார்கள் (ஆதி. 26:1-33).

3.சங்கீதம் 34ன் தலைப்பில் ஓர் அபிமெலேக்கைப் பற்றி கூறியுள்ளது. தாவீது சவுலுக்குத் தப்பி ஓடி இவனிடம் ஒதுக்கிடம் தேடினான் (1 சாமு. 21:8)

4. கிதியோனுக்கு சீகேமிலிருந்த ஒரு வைப்பாட்டி பெற்ற மகன் (நியா.9:1). இவன் தன் தகப்பனின் குமாரர் எழுபதுபேரைக் கொலை செய்தான். பின்பு சீகேமியர் இவனை இராஜாவாக்கினார்கள் (நியா. 9:5,6).

இவன் இஸ்ரவேலில் மூன்று வருடம் அரசாண்ட பின் தேபேசுக்குப்போய் யுத்தம் செய்தபோது, ஒரு ஸ்திரீ எந்திரக் கல்லின் துண்டை அவன் தலைமேல் போட்டதினால், அவன் தன் ஆயுத தாரியைக் கொண்டு தன்னைக் குத்துவித்தான் (நியா. 9:54,55).

5. தாவீதின் நாள்களில் ஓர் அபிமெலேக்கு ஆசாரியனாய் இருந்தான் (1 நாளா. 18:16).

6. ஓர் அபிமெலேக்கைப் பற்றி 1 நாளா. 24:31-ல் குறித்துள்ளது.

« Prev 30 / 564 Next »