அபியா (Abiah)
(கர்த்தர் பிதா)
1. சாமுவேல் தீர்க்கதரிசியின் இரண்டாம் மகன் (1 சாமு. 8:2). 2. தாவீதின் நாட்களில் ஆசாரிய ஊழியத்துக்குச் சீட்டு போட்டபோது, எட்டாம் சீட்டு அபியாவின் பேர் வழிக்கு விழுந்தது (1 நாளா. 24:10). யோவான் ஸ்நானகனின் தகப்பன் சகரியா, இந்த அபியா என்னும் ஆசாரிய வகுப்பைச் சேர்ந்தவன் (லூக்கா 1:5).
3. இஸ்ரவேல் இராஜாவாகிய யெரோபெயாமின் மகன் அபியா. இவன் வியாதிப்பட்டிருக்கையில், இவனுடைய தாய் அகியா என்னும் தீர்க்கதரிசியிடம் விசாரிக்கப்போன வேளையில், அவன் யெரோபெயாம் குடும்பத்துக்கு வரும் தேவனுடைய தீர்ப்பைச் சொல்லி, பிள்ளையாண்டானும் செத்துப்போவான் என்றான். அப்படியே ஆயிற்று (1 இரா. 14:1-8).
4. யூதா இராஜாவாகிய ரெகொபெயாமின் மகன். இவனும் இராஜாவாய் வந்தான். (1 நாளா. 3:10; 2 நாளா. 11:20;14:1). இவன் பெயர் அபியாம் என்றும் குறித்துள்ளது. (1 இரா. 14:31),
இந்த அபியாம் எருசலேமில் மூன்று வருஷம் இராஜ்யபாரம்
பண்ணினான் (1 இரா. 15:3). அபியாமுக்கும். யெரோபெயாமைத் தோற்கடித்து, அவனுடைய பட்டணங்களையும் கைப்பற்றினான். யுத்தத்துக்கு முன், அவன் ஒரு மலைமேல் ஏறி பேசிச்சொன்ன வார்த்தைகள் வியக்கத்தக்கது (2 நாளா. 13:4-12).
பின்பு அபியா பலங்கொண்டு அநேக ஸ்திரீகளை விவாகம் பண்ணி, குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றபின் மரித்தான் (2 நாளா.13:21).
5. நெகேமியாவின் காலத்தில் உடன்படிக்கைக்கு முத்திரை போட்டவர்களில் ஒருவன் (நெகே. 10:7).