அபியத்தார் (Abiathar)
(பிதா தலைமையானவன்)
இவன் அகிமெலேக்கின் மகன் (1 சாமு. 22:20). இவனுடைய குமாரன் பெயரும் அகிமெலேக் (2 சாமு. 8:17). சவுல் நோபிலுள்ள ஆசாரியர்களைக் கொல்லுவித்தபோது, இவன் ஒருவன் தப்பி, கேகிலாவுக்கு தாவீதிடம் ஓடிப்போனான் (1 சாமு.22:20). இவனிடம் ஒரு ஏபோத்து இருந்தது (1 சாமு. 23:6). கர்த்தருடைய பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுவந்த வேளையிலும் இவன் ஆசாரியனாய் இருந்தான் (1 நாளா. 15:11). அப்சலோம் கலகம் செய்த நாள்களில் அபியத்தார் தாவீதுக்கு உதவியாயிருந்தான் (2 சாமு. 15:35; 17:15).
அதோனியா இராஜாவாக வர முயன்றபோது இவனைத் தன் பக்கத்தில் சேர்த்துக் கொண்டான் (1 இரா. 1:19). சாலொமோன் இராஜாவான பின் இவனை ஆசாரியனா
யிராதபடி தள்ளிப்போட்டான் (1 இரா. 2:26,27), இயேசுவும் இந்த அபியத்தாரைப்பற்றிக் கூறியிருக்கிறார் (மாற். 2:26).
ஏலி வம்சத்தின் கடைசி பிரதான ஆசாரியன் இவனே.